குறியம்

TCC Logo

குறியத்தில் ஐந்து கூறுகள் உள்ளன.

தமிழ் சமுக மையம் என்பது எமது சமூகத்தின் பாரம்பரியத்தை, தொன்மையினை, அதன் செழிப்பான வரலாற்றை கடநத காலதடதில் இருந்து எதிர்காலத்திற்கு எடுத்துச் செல்லும் உன்னத நோக்கத்தை கொண்டதாக உருவாக்கப்படுகின்றது.
Akaram
Akaram

அகரம்

இது நமது எழுத்துக்களின் முதல் எழுத்து மற்றும் ஒலியியல் ரீதியாக நமது மொழியின் முதல் ஒலி “அ” கரம் . சுழி என்பது தமிழ் எழுதக் கற்றுக் கொள்ளும்போதும் அல்லது வரையக் கற்றுக் கொள்ளும் போதும் முதல் வடிவமாகும், இது அநேகமான உயிரெழுத்திலும் தொடங்கும் வடிவமாகும்.சுழி என்பது எங்கள் குறியத்தின் முதல் கூறு ஆகும்.
Community
Community

சமூகம்

சமூகத்துடனான இணைப்பில் இருந்து நாம் எமக்கான அர்த்தத்தையும் ஆற்றலையும் பெறுகிறோம். புலம்பெயர்ந்து வாழும் பல்லின சமுகங்களை கொண்டுள்ள கனேடிய தேச்தின் பன்மைத்துவத்தின் அடையாளமாய் ஒன்றிணையும் கரங்களின் பிணைப்பாக இந்த குறியம் உருவாக்கப்பட்டுள்ளது.இது ஒற்றுமையின் வலிமையைக் குறிக்கிறது.
Kolam
Kolam

கோலம்

கோலம் தமிழ் பண்பாட்டு கூறுகளில் ஒன்று. இது இயற்கையுடன் இணைந்து வாழ்தலை குறிக்கும். அரிச மாவினால் வரையப்படும் கோலமானது சிறு பறவைகளுக்கும் எறும்பு முதலான சிற்றுயிர்களுக்கும் உணவாக அமையும். இது மக்கள் மற்றும் செழிப்பை வரவேற்கவும் பயன்படுகிறது. இந்த குறியம் எமது தமிழ் சமூகத்தையும் அனைத்து கனேடியர்களையும் தமிழ் சமுக மையத்திற்கு வரவேற்கும் கோலமாக அடையாளப்படுத்தலாம்.
Sun
Sun

சூரியன்

தமிழர்களின் பண்பாடு இயற்ககையின் முதன்மையான சூரியனோடு பின்னிப் பிணைந்திருக்கின்றது. சூரியனை கடவுளாக கொண்டாடும் மரபு தமிழர்களுடையது. தமிழ்ர்; திருநாளான தைப் பொங்கல் சூரியனுக்கு நன்றி சொல்லும் பெருவிழா. தமிழர்களின் புத்தாண்டு சூரியச் சுழற்றியில் தங்கியுள்ளது. சூரியனைப் போல பிரகாசமாகவும் அனைவருக்கும் நன்மை பயக்கும் ஒரு மையமாகவும் தமிழ் சமூக மையம் விளங்கும் என்பதன் குறியீடகாக இந்த குறியம் அமைகின்றது.
Five
Five

ஐந்து

ஐந்தாம் எண் தமிழ் கலாச்சாரத்தில் தொடர்ச்சியான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, ஐந்திணைகள், ஜம்பெருங்காப்பியங்கள், ஐம்பூதங்கள் என தமிழர்களோடு ஐந்து நெருக்கமான தொடர்பை கொண்டுள்ளதால் எமது குறியத்தை ஐந்து சுழிகள் கொண்டதாக வடிவமைத்திருக்கின்றோம்.

To learn more about the logo
check out our video here

cta image

நீங்கள் ஒரு குழு தன்னார்வலராக இருக்க ஆர்வமாக இருந்தால்

கீழே உள்ள விண்ணப்பத்தை பிப்ரவரி 23,2024 க்குள் நிரப்பவும். ஒரு சிறந்த குழு உறுப்பினராக இருக்கும் ஒருவரை நீங்கள் அறிந்திருந்தால், அவர்களின் பெயர்கள் மற்றும் தொடர்புத் தகவலை எங்களுக்கு மின்னஞ்சலுக்கு பிப்ரவரி 23,2024 க்குள் அனுப்பவும்.
TA