இந்த மையத்தின் கட்டுமானத்தேவைகளுக்கான நிதிப்பங்களிப்புகள் பின்வருமாறு அமையும் என தமிழ் சமூக மைய செயற்றிட்டம் எதிர்பார்க்கிறது: மத்திய அரசு $16மில்லியன் (40%), மாநில அரசு $13.2மில்லியன் (33%), உரிமையாளர்கள் $10.8மில்லியன் (27%).

இந்த 27% உரிமையாளர்களின் பங்கை தமிழ் சமூக மையத்தால் திரட்டமுடியும் என நிரூபிக்கவென கொடை உறுதிமொழிகளைப் பெற்றுக்கொள்ளும் பரப்புரைச்செயற்பாடு ஒன்றை, இத்தக் உட்கட்டுமானத் திட்டத்தின் வரைமுறைகளுக்கு உட்பட்டு, தமிழ் சமூக மையம் முன்னெடுத்தது. இதுவiரை 11.2 மில்லியன் டொலர்கள் குமுக அங்கத்தவர்கள், தொழில் நிலையங்கள், அமைப்புகள் என்பனவற்றிடமிருந்து கொடை உறுதிமொழியாகப் பெறப்பட்டிருக்கிறது. தேவைப்படின், உட்கட்டுமான அமைச்சால் குமுக அமைப்புகளுக்கென வழங்கப்படும் கடனுதவியை, திட்டத்தின் வரைமுறைகளுக்கு உட்பட்டு, பெற்றுக்கொள்ள முயலவும் தமிழ் சமூக மையம் தயங்காது. தமிழ் தமூக மையத்தை அற நிலையமாக பதிவுசெய்யும் நடவடிக்கைகள் இப்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன. மையத்தை அற நிலையமாகப் பதிவுசெய்யும் உரிமைக்காப்புப் பத்திரங்கள் பொதுக் காவலருக்கும் அறங்காவலருக்குமான செயலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. குமுகத்தவர்கள் வழங்கிய ஆதரவுக்கும் கொடை உறுதிமொழிகளுக்கும் வழிபடுத்துக்குழு தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு, முடிவுகள் தெரியவரும்போது உடனுக்குடன் அவை குமுகத்திற்குத் தெரியப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துக்கொள்கிறது.

Summary of pledges
(public and confidential)

See All Public Pledges

Fill out a pledge form or endorse the project as an organization.


Thank you for your pledge!